ETV Bharat / city

ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடெங்கிலும் எதிரொலி - தொழிலாளர் நலவாரியம்

தூத்துக்குடி: தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 24, 2019, 10:55 PM IST

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் கோரம்பள்ளத்திலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் சேது, "மத்தியில் பிஜேபி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது கட்டுமானத் தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்கும் வகையில் உள்ளது. மேலும் நலவாரியங்களை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து, நலவாரியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 40,000 கோடி ரூபாயை மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கிறது. இது கட்டுமான தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். விபத்தின் மூலம் ஏற்படும் மரணத்திற்கான இழப்பீடு நிதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகை, நலநிதி, காப்பீடு உதவித்தொகை ஆகியவற்றை உயர்த்தி வழங்கவேண்டும். இதற்கு பின்னரும் எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் மாவட்ட அளவில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதேபோன்று, வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் ஏஐடியுசியின் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தேவதாஸ் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். இந்த ஆர்பாட்டத்தில் திரளான கட்டுமான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, கட்டுமான தொழிலாளர்கள் 50 ஆண்டுகளாக போராடி பெற்ற கட்டுமான தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்களின் சலுகைகளை அமல்படுத்தக்கோரி திருப்பூரில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர்களுக்கு முறையான பலன்களை வழங்க கோரி ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தினர் இன்று திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Intro:தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு
கட்டுமான தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
Body:

தூத்துக்குடி

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேது தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், பாலசிங்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கட்டிட தொழிலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் சேது செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது,

மத்தியில் பிஜேபி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இது கட்டுமானத் தொழிலையும் தொழிலாளர்களையும் அழிக்கும் வகையில் உள்ளது. மேலும் நல வாரியங்களை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து நலவாரியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 40,000 கோடி ரூபாயை மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கிறது. இது கட்டுமான தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும்.
விபத்தின் மூலம் ஏற்படும் மரணத்திற்கான இழப்பீடு நிதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி உதவித்தொகை, நலநிதி, காப்பீடு உதவித்தொகை
ஆகியவற்றை உயர்த்தி வழங்கவேண்டும் உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுகிறது.

இதற்கு பின்னரும் எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் மாவட்ட அளவில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.