தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொசுவலை போர்த்தி கையில் சிமிலி விளக்குடன் தரையில் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மின்விசிறியை செயல்படுத்த முடியாததால் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
மேலும் மாவட்டம் முழுவதும் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு போன்ற நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அறிவிக்கப்படாத மின்வெட்டை தடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படியுங்க: