ETV Bharat / city

முதல் நாள் பள்ளிக்குச்சென்ற மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழப்பு - சோகத்தை ஏற்படுத்தும் முழுப்பின்னணி - lkg மாணவன் உயிரிழப்பு

திருநெல்வேலி அனவரதநல்லூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்

author img

By

Published : Jun 27, 2022, 3:14 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியிலிருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச்சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று(ஜூன்.27) ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார்.

அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் திடீரென்று ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது எல்கேஜி படிக்கும் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த உயிரிழந்த மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்குச் சென்றான். மேலும் இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லதம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர்.

இதில் சில மாணவ மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர். உடனே, இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் ராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆட்டோ கவிழ்ந்து விபத்து: எல்கேஜி மாணவன் உயிரிழப்பு - நான்கு குழந்தைகள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.