திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஜவுளிக் கடை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நேற்று முன்தினம் (டிச.1) காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேலப்பாளையம் அருகே வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் நேற்று முன்தினம் சுமார் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையால் ஜவுளிக்கடைகள், தங்க நகை கடைகள், வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் பல சரக்கு விற்பனை செய்யும் அனைத்தும் விற்பனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் (டிச.3) வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வழக்கமாக இதுபோன்ற சோதனையில் சம்பந்தப்பட்ட நபர்கள் வரிஏய்ப்பு உள்பட சில முறைகேடுகளில் ஈடுபட்டால் மட்டுமே தொடர்ச்சியாக அலுவலர்கள் சோதனை நடத்துவார்கள்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக ரெய்டு நீடிப்பதால், மிகப்பெரிய அளவில் வரிஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது நாளாக நடைபெறும் சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Omicron: தென்னாப்பிரிக்காவிலிருந்து ராஜஸ்தான் திரும்பியோருக்குத் தொற்று