திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவதில் மெகா தூய்மைப் பணி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கி வைத்தார். மேலும் ஆட்சியர் விஷ்ணு பாபநாசத்தில் தூய்மைப்பணிகளை ஆய்வுசெய்து சில தூரம் படகில் சென்றார்.
இதேபோல் நெல்லை மாநகரப்பகுதியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் படகில் சென்றபடி தூய்மைப் பணியினை பார்வையிட்டனர். அப்போது, அலுவலர்கள் முன்னிலையில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், படகில் சென்றபடி இளையராஜா பாடலை தனது சொந்தக் குரலில் பாடினார்.
குறிப்பாக 'சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போல வருமா' என்று பாடி அசத்தினார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் பாட்டுப்பாடி அசத்திய தீயணைப்பு நிலைய அலுவலரை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேற்று(ஏப். 25) நேரில் அழைத்து அவருக்கு சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
இதையும் படிங்க: 'மாணவர்களை நல்வழிப்படுத்தும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்'