ETV Bharat / city

விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - 3 பேர் கொண்ட குழு

திருநெல்வேலி : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

author img

By

Published : Jan 14, 2021, 8:49 PM IST

கன்னியாகுமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பொழிந்துவருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டிவிட்டன. பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்து ஏறத்தாழ 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல, ஆற்று பாதையான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைகுறிச்சி, விக்ரமசிங்கபுரம், காரைக்குறிச்சி, பத்தமடை, நெல்லை கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்டிருக்கும் இந்த பகுதிகளில் வெள்ளத்தில் நெல் பயிர்கள் மூழ்கி நாசமடைந்துள்ளன. பயிர்கள் அழுகியதால் செய்வது அறியாமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிலங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கள ஆய்வுகளை நிறைவு செய்த பின் அதனடிப்படையில், அறிக்கை தயாரித்து இக்குழு அரசுக்கு சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்

இந்நிலையில், நெல்லைக்கு இன்று (ஜன.14) வருகை தந்த அக்குழுவினர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினர்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ நெல்லை மாவட்டத்தில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள், பாதிப்புகள் குறித்து ஆராய குழுவொன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து அலுவலர்களும் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நெல்லையில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் விழா என்று கூட பார்க்காமல் அலுவலர்கள் 24 மணி நேரமும் மக்களை பாதுகாக்க பணியாற்றி வருகின்றனர்.

இந்த வெள்ளத்தில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து வெள்ளநீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கப்படும். மாஞ்சோலை பகுதியில் அதிக பட்சம் 517 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. எனவே, அங்கு உள்ள மலைவாழ் மக்களுக்கு போதிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.