ETV Bharat / city

ஒண்டிவீரன் இந்தியாவிற்கான விடுதலைப் போராட்ட வீரர்... ஆளுநர் ஆர்என் ரவி...

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் தபால் தலையை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒண்டிவீரன் ஒரு சமுதாயத்திற்கான சொந்தக்காரர் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் சொந்தக்காரர் என்றும் தென்பகுதி ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களைக் கொண்ட மண் என்றும் தெரிவித்துள்ளார்

ஆர்என் ரவி
ஆர்என் ரவி
author img

By

Published : Aug 21, 2022, 3:36 PM IST

நெல்லை: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, அறியபடாத சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைபடுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதன் ஒருபகுதியாக, தபால்துறை மூலம் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவீரன் ஒண்டிவீரனுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது.

நெல்லையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஒண்டிவீரன் தபால் தலையை வெளியிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பெற்றுக்கொண்டு முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி துரைசாமி மற்றும் ஒண்டிவீரன் வாரிசு ஒண்டி ஆறுமுகத்திடம் ஒப்படைந்தார்.

ஒண்டிவீரன் தபால்தலை: நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசுகையில், 'மண்ணின் மைந்தன், ஒண்டிவீரன் தபால் துறை வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வது பெருமையாக நினைக்கிறேன். தென்பகுதிக்கு வரும்போதெல்லாம் என்னிடம் பணிவு ஏற்படுகிறது. ஏனெனில், ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்களைக் கொண்டது இந்த மண். ஆண்களும் பெண்களும் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் தாங்கியும் எழுத்துக்கள் மூலமும் பிரச்சாரம் செய்தனர்.

வேலூர் புரட்சி 1806-யை படித்தபோது, மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அப்போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டநிலையில், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெல்லையைச் சேர்ந்தவராக இருந்தனர். ஆங்கிலேய அரசு வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது; நமது துரதிஷ்டம் அவர்களை நாம் மறந்து விட்டோம்.

ஒண்டிவீரன்-இந்தியாவிற்கான விடுதலை வீரர்: நமது வரலாறு வெளியே தெரியாத முறையில் இருந்தது. பிரிட்டிஷ் அரசு வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றோரின் வரலாற்றை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. இன்னும் அவர்கள் இசை நாட்டுப்புறக்கலைகள் வழியாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒண்டிவீரன் ஒரு சமுதாயத்திற்கான சொந்தக்காரர் அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்கும், இந்தியாவிற்கும் அவர் சொந்தக்காரர்.

இந்திய வரலாற்றை சிதைத்த ஆங்கிலேயர்: தற்போது, பாரத பிரதமர் எடுத்த முயற்சி மூலம் அறியப்படாத வீரர்கள் வெளிக்கொண்டுவரும் முயற்சி நடந்து வருகிறது.1857-ல், சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. மகாத்மா காந்தி வந்த பின்பு சுதந்திரப் போர் தொடங்கியதாக சொல்கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் கால் வைத்த நாள் முதலே சுதந்திரப் போர் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றை வரக்கூடிய சந்ததியினரிடம் நாம் பதிவு செய்யவேண்டும். ஆங்கிலேயர்கள் இந்திய வரலாற்றை சிதைத்து தவறான வரலாறுகளை சித்தரித்துள்ளனர்.

புதிய இந்தியா உருவாகவேண்டும்: சென்னை மாகாணமாக இருந்தபோது, வில்லியம் பெண்டிங் என்பவர் நடத்திய ஆய்வில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை, பட்டியல் இனத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் இருந்தனர். இந்தியா எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் இருந்ததாக, நமக்கு இதன் மூலம் தெரிகிறது. ஆங்கிலேய அரசின் மூலம் இந்தியா பாகுபாடு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியா வெவ்வேறு ராஜாக்களின் ஆளுமைக்குள் இருந்தாலும் ஒரே தேசமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் அதனைப் பிளவுபடுத்தி நிலத்தைப் பிரித்தனர். புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்; 2047 இந்தியா வளர்ந்த மற்றவர்களுக்கு வழிகாட்டும் நாடாக உருவாகும் அந்த இலக்கை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை வளர்த்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தில் உயர்கல்வி கல்வி சதவீதம் அதிகம். அகில இந்திய அளவில் 28 % வரை தான் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. தமிழகத்தில் 50 % உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கையுள்ளதில் பட்டியலின மக்கள் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 12- 16% மட்டுமே உள்ளது. நாம் ஒரு குடும்பமாக வளரவேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஓண்டிவீரன் தபால் தலை வெளியீட்டு விழா

இதையும் படிங்க: ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.