ETV Bharat / city

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் நடந்த சுவாரஸ்யம்!

author img

By

Published : Jul 29, 2022, 7:05 PM IST

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், மறைந்த ஜமீன்தாரரிடம் உத்தரவு பெற பக்தர்கள் செய்த காரியம் வியப்பை ஏற்படுத்தியது.

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் நடந்த சுவாரசியம்

நெல்லை மாவட்டம், அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சபரிமலை அய்யப்பன் கோயிலின் மூலஸ்தானமாக கருதப்படும் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கியும், சங்கிலியால் அடித்துக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குவதற்கு முன் இந்தியாவின் கடைசி முடிசூடிய ஜமீன்தாரரான முருகதாஸ் தீர்த்தபதியிடம் உத்தரவு வாங்கியபின் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். அப்போது ஜமீன் ராஜ உடையில் காட்சியளிப்பார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தாரர் இறந்துவிட்டார்.

அதிலிருந்து கரோனா காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டு, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் ஜமீன் மறைவிற்குப்பிறகு முதன்முதலாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்வு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ஜமீன்தாரர் இல்லாத காரணத்தினால் அவரது நாற்காலி, படம், வாள் உள்ளிட்டவற்றை வைத்து பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஜமீன்தாரரின் மகனிடம் உத்தரவு வாங்கி பக்தர்கள் பூக்குழி இறங்கத்தொடங்கினர். அதன்படி ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என சுமார் 500 பேர் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனைச்செலுத்தினர்.

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவில் நடந்த சுவாரஸ்யம்!

தொடர்ந்து கோயில் வளாகத்திலுள்ள சங்கிலி பூதத்தார் ஆலயம் முன் பக்தர்கள் சங்கிலியால் தங்கள் மார்பில் அடித்து கொண்டும் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை நெல்லை எஸ்.பி. சரவணன் ஆய்வுமேற்கொண்டார். மேலும் சுமார் 550 காவல்துறையினர், 250 வனத்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.