ETV Bharat / city

விழிப்புணர்விற்காக ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்! - Radhapuram independent candidate news

திருநெல்வேலி: 10 ரூபாய் நாணயத்தை கண்டாலே ஓடி ஒளியும் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்பாளர் ஒருவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்

author img

By

Published : Mar 17, 2021, 5:24 PM IST

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முனைப்பில் பல்வேறு கட்சியினர் இராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச் 16) திசையன்விளையைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ராஜீவ் வேட்பு மனுவினை தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் தேர்தல் கட்டுமானத் தொகையான பத்தாயிரம் ரூபாய்க்கு, ரூபாய் நோட்டுக்கு பதிலாக 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்த 10 ரூபாய் நாணயத்தை நான்கு தேர்தல் அலுவலர்கள் சுமார் ஒரு மணி நேரம் எண்ணி முடித்தனர்.

இது குறித்து வேட்பாளர் ராஜீவ் கூறுகையில், “பொதுமக்கள் மத்தியில் ரூ.10 நாணயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாணயமாகக் கொண்டு வந்தேன். மேலும், பல இடங்களில் சில்லரை வியாபாரிகளிடமும், விற்பனையாளர்களிடமும் 10 ரூபாய் நாணயம் வாங்குவதற்கு பலர் தயங்குகின்றனர். 10 ரூபாய் நாணயம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பத்தாயிரத்திற்கான ரூ.10 நாணயத்தை வழங்கினேன்” எனத் தெரிவித்தார்.

ஆயிரம் 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனுத்தாக்கல் செய்த வேட்பாளர்

இவர் ஏற்கனவே 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...ELECTION BREAKING: வேட்பாளர் மாற்றம் முதல் அறிக்கை குற்றச்சாட்டு வரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.