ETV Bharat / city

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

டெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடைவிதிக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Radhapuram constituency recount ban extension
author img

By

Published : Nov 13, 2019, 1:26 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அப்பாவுவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றார்.

வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் இடையே போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

அப்பாவு எதிர்ப்பு

இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக அப்பாவு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு விழுந்த அஞ்சல் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன என்றும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் அப்பாவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

மறுவாக்கு எண்ணிக்கை

இதையடுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. இந்த முடிவுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

இதுகுறித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கையை விசாரிக்க தடைவிதித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'செல்லாத வாக்குகளை எண்ணினால் தோல்வியுறக் கூடும். முறையாக இல்லாத வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றிபெற்றார்' எனக் கூறினார்.

தள்ளிவைப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கை, நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் இது தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை வருகிற 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதுவரை ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க நவ. 22ஆம் தேதி வரை தடை நீடிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு - வெற்றி பெறுவாரா அப்பாவு?

Intro:Body:

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை கோரிய வழக்கு * நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும்- நீதிபதிகள் கேள்வி * தகுதிநீக்க வழக்கு இல்லையே? எனவும் நீதிபதிகள் கருத்து (1/3) #Radhapuram | #DMK | #AIADMK

செல்லாத ஓட்டுக்களை எண்ணினால், தோல்வியடைய நேரும் - எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பு * வழக்கு விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது, உச்சநீதிமன்றம், முறையாக இல்லாத ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதால், 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்- இன்பதுரை தரப்பு**

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க நவ.22ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் | #Radhapuram | #SupremeCourt

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.