ETV Bharat / city

நெல்லையில் கள்ள ஓட்டுப் போட முயற்சி? - வேட்பாளர்களை எச்சரித்த காவல் துறை - வாக்குச்சாவடிக்குள் புகுந்த வேட்பாளர்கள்

திருநெல்வேலி மானூர் வாக்குச்சாவடிக்குள் திடீரென வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், சிலர் புகுந்ததால் அங்கு கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்தார்களா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேட்பாளர்களை எச்சரிக்கும் காவல் துறை
வேட்பாளர்களை எச்சரிக்கும் காவல் துறை
author img

By

Published : Oct 6, 2021, 3:56 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்கள் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், மானூர் வாக்குச்சாவடியில் திடீரென வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டதாகத் தகவல் வெளியானது.

இதையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர் வாக்குச்சாவடியில் இருந்த வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளை அதிரடியாக வெளியேற்றினர்.

காவல் துறை எச்சரிக்கை

மேலும், 200 மீட்டர் தூரத்திற்கு யாரும் உள்ளே வரக்கூடாது எனவும்; மீறி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

வேட்பாளர்களை எச்சரிக்கும் காவல் துறை

அப்போது, வேட்பாளர்கள் சிலர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வேட்பாளர்கள் உள்ளிட்ட சிலர் வாக்குச்சாவடிக்குள் புகுந்ததால் கள்ள ஓட்டுப் போட முயற்சி செய்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், அந்த வாக்குச்சாவடி பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: வாக்களித்தும் என்ன பயன்... பிரதிநிதித்துவம் இல்லையே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.