ETV Bharat / city

நெல்லை அருகே பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது

ஆலங்குளம் அருகே மகராஜன் ஜவுளி ஸ்டோர் என்ற கடையில், பிரபல ஜவுளி நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகப் பயன்படுத்தி வியாபாரம் செய்த உரிமையாளர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நெல்லை அருகே பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது
நெல்லை அருகே பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது
author img

By

Published : Oct 16, 2021, 1:12 PM IST

திருநெல்வேலி: ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் மகராஜன் ஜவுளிக்கடை இயங்கிவருகிறது. இதன் உரிமையாளர் ராஜேந்திரன் (60) ஈரோடு, திருப்பூரில் மலிவாக வேட்டி, சட்டை உள்ளாடைகளை வாங்கிவந்து அதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகத் தயாரித்து ஒட்டி விற்பனை செய்துள்ளார்.

இதற்காக ஆலங்குளத்தில் டைப்பிஸ்ட் செல்வகுமார் என்பவர் போலியான முத்திரைகளைத் தயாரித்துத் தந்துள்ளார். திருநெல்வேலி ஜங்ஷன், சி பிரிண்ட் நிறுவனத்திலும் போலியான முத்திரைகளைப் பிரிண்ட் செய்துள்ளனர். இது குறித்து பிரபல நிறுவன மேலாளர் பாபு அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மகராஜன் ஜவுளி நிறுவன அதிபர் ராஜேந்திரன், மகன்கள் திலகராஜ், ஜெயப்பிரகாஷ், தமிழரசன், பிரிண்ட் செய்து தந்த சி பிரிண்ட் நிறுவனம், தயாரித்து கொடுத்த ஆலங்குளம் செல்வகுமார் ஆகியோர் மீது ஏழு குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அதிபர் ராஜேந்திரன், மகன் தமிழரசன் ஆகியோர் கைதுசெய்து, மற்றவர்களைத் தேடிவருகின்றனர்.

இதனையடுத்து போலியான துணிகளும், முத்திரை தயாரிக்கப் பயன்படுத்திய ஜெராக்ஸ் மெஷின், ஸ்கேனர், கணினி ஆகியனவும் பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க:IPL 2021: 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டார் தோனி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.