ETV Bharat / city

சதம் அடித்த வெங்காய  விலை; கண்ணை கசக்கும் இல்லத்தரசிகள் - வெங்காயம் விலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லையில் வெங்காயம் விலை சதம் அடித்தது
நெல்லையில் வெங்காயம் விலை சதம் அடித்தது
author img

By

Published : Oct 14, 2022, 1:06 PM IST

திருநெல்வேலி: சாம்பாரில் தொடங்கி பொறியல், அவியல், ஆம்லேட், பிரியாணி என்று சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது. அதேசமயம் விவசாயிகள் இடையே வெங்காயம் உற்பத்தி என்பது அவ்வப்போது குறைவதும் அதன்காரணமாக விலை உயர்வதும் வழக்கம். அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்திய அதிகளவு இருந்ததால், விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய் என்றும் சின்ன வெங்காயமும் 30 முதல் 40 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டுவந்தது.

நெல்லையில் வெங்காயம் விலை சதம் அடித்தது

இந்த நிலையில் திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை ஒரே நாளில் 50 முதல் 60 ரூபாய் வரை உயரந்துள்ளது. நேற்று(அக்.13) ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 40-க்கு விற்பனையான நிலையில் இன்று(அக்.14) ஒரு கிலோ 90 முதல் 100 ரூபாய் வரை விற்கிறது.

இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரி சயது அலி கூறும்போது, தாராபுரம் துறையூர் பகுதிகளில் இருந்து பாளை மார்க்கெட்டிற்கு நாள்தோறும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும்.

ஆனால், இன்று 20 மூட்டைகள் தான் வந்துள்ளன. ஆகவே வரத்து குறைவால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு 10 முதல் 15 ரூபாய் மட்டும் உயர்ந்து ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு ரூ.64 லட்சம் உண்டில் காணிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.