ETV Bharat / city

திருக்குறள் வாசிப்பில் புதிய சாதனை: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்! - தி்ருநெல்வேலி அரசு மருத்துவமனை

மூன்று நிமிடத்தில் 53 திருக்குறள்களை ஒப்புவித்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து நான்கு வயது சிறுவனைப் பற்றி இந்தச் சிறப்புத் தொகுப்பில் காணலாம்.

thirukkural reading 4 year old boy
thirukkural reading 4 year old boy
author img

By

Published : Dec 4, 2020, 5:22 PM IST

Updated : Dec 5, 2020, 7:47 PM IST

தினமும் உதிக்கும் கதிரவனின் பார்வைபட்ட நொடியில் பூத்துக்குலுங்கும் மொட்டுக்களைபோல் சிரிக்கும் மழலைகளின் சிரிப்பில் மயங்காதவர்களே இல்லை. பெரும்பாலும் ஐந்து வயது வரை மழலைகள் செய்யும் குறும்புத்தனம் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு ரசனையாக இருக்கும் என்றே கூறலாம். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது பிறக்கும் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக விஷயங்களை கற்றுக் கொள்வதை கேள்விப்பட்டுவருகிறோம்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் வெறும் மூன்று நிமிடத்தில் 53 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். பாளையங்கோட்டையை சேர்ந்த பிரபுராஜ்-ஹரிப்ரியா தம்பதியின் மகன் சதுர் கிருஷ் ஆத்விக்.

இந்த பிரபுராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் வல்லுநராகப் பணிபுரிந்துவருகிறார். அதேபோல் ஹரிபிரியாவும் பல் மருத்துவராக உள்ளார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்

இந்த நிலையில் சதுர் கிருஷ் ஆத்விக் தனது இரண்டு வயதில் தமிழ் பேசுவதில் ஆர்வமாக இருந்ததை அறிந்த பிரபு ராஜ்-ஹரி பிரியா தம்பதி சிறுவனுக்கு இரண்டு வயது முதலே தமிழ் நூல்கள் குறித்து கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். குறிப்பாக திருக்குறளை அதிகளவில் கற்றுக் கொடுத்துள்ளனர்.

அதன்படி, தற்போது சதுர் கிருஷ் ஆத்விக் எல்கேஜி படித்துவரும் நிலையில் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும் வெளியில் அழைத்துச் செல்லும்போதும் காரில் வைத்து ஹரிபிரியா ஆர்வத்துடன் தனது மகனுக்கு திருக்குறளை சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக சதுர் கிருஷ் ஆத்விக் தனது நான்கு வயதிலேயே சரளமாக திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிக்க கற்றுக் கொண்டுள்ளார்.

இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த ஹரிப்பிரியா தனது மகனின் திறமையை வெளிக் கொண்டுவர முடிவு செய்துள்ளார். அதன்படி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை போட்டியில் சதுர் கிருஷ் ஆத்விக் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது சிறுவன் வெறும் மூன்று நிமிடத்தில் 53 திருக்குறளை மனப்பாடமாக பிழையின்றி ஒப்புவித்துள்ளார்.

இதையடுத்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சிறுவனைப் பாராட்டி உலக சாதனை விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். அதேபோல் குளோபல் ரெக்கார்டு ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனமும் சிறுவனுக்கு இளம் வயது சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அதாவது மிகச் சிறிய வயதில் அதிக திருக்குறளை ஒப்புவித்த சிறுவன் என்ற விருது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுவனின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் சிறுவன் பல்வேறு வெளி நாடுகளின் பெயர்கள், அந்தந்த நாடுகளின் தலைநகரங்களையும் மனப்பாடமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி ஒரு நிமிடம் 50 நொடியில் 48 நாடுகளின் பெயர்களையும் அதன் தலைநகரங்களின் பெயர்களையும் மனப்பாடமாக ஒப்புவித்துள்ளார்.

மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும், அதன் தலைநகரங்களையும் சிறுவன் சதுர் கிருஷ் ஆத்விக் மனப்பாடமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதற்கும் சேர்த்து மேற்கண்ட நிறுவனங்கள் சிறுவனுக்கு விருது வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் திறமை குறித்து நாம் நேரில் சென்று பார்த்தபோது மிகவும் குறும்புத்தனத்தோடும், மழலை மொழியோடும் திருக்குறளை நம்மிடம் ஒப்புவித்து காண்பித்தார்.

என்னதான் உலக சாதனை படைத்து இருந்தாலும் நான்கு வயதே நிரம்பிய சிறுவன் என்பதால் தனக்கே உரிய பாணியில் குறும்புத்தனமான சேட்டைகள் உடன் திருக்குறளை ஒப்புவித்தார். அதாவது விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்தால்தான் திருக்குறளை ஒப்புவிப்பேன் என்று சிறுவன் சதுர் கிருஷ் ஆத்விக் அடம்பிடித்தது மழலைத்தனத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தியது.

இது குறித்து சிறுவனின் தாயார் ஹரிப்பிரியா கூறுகையில், இரண்டு வயதில் இருந்தே எனது மகன் தமிழ் சரளமாகப் பேசுவதை அறிந்து அவனுக்குத் திருக்குறளை கற்றுக் கொடுத்தோம். தற்போது மூன்று நிமிடத்தில் 53 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்தார். இதனால் அவருக்கு உலக சாதனை விருது கிடைத்துள்ளது.

இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் பெறுவதற்கு வழிகாட்டிவருகிறோம். தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் திருக்குறளை எளிதில் கற்றுக் கொண்டார் எனத் தெரிவித்தார்

மழலை மொழி பேசி பார்ப்பவர்களை மயக்குவதோடு மட்டுமல்லாமல் தமிழின் தொன்மையான மொழியான திருக்குறளை சரளமாக வாசித்து சாதனை படைத்துள்ள சிறுவரின் செயல் பாராட்டுக்குரியதே.

இதையும் படிங்க: சுற்றுப்புறத்தை பாழாக்கும் மதுபாட்டில்கள்- பயனுள்ளதாக மாற்றும் பட்டதாரி பெண்!

Last Updated : Dec 5, 2020, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.