ETV Bharat / city

"காலேஜ் பீஸ் கட்ட அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க..." - நெல்லை மாணவி தற்கொலை கடிதத்தில் உருக்கம்! - சாவில் மர்மம் இல்லை என மாணவி கடிதம்

கல்லூரிக் கட்டணம் செலுத்த தந்தை சிரமப்படுவதைத் தன்னால் பார்க்க முடியவில்லை என்றும், பெற்றோரை சிரமப்படுத்த வேண்டாம் என்பதற்காகவே தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் நெல்லை மாணவி தற்கொலை கடிதத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

"காலேஜ் பீஸ் கட்ட அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க, என் சாவில் எந்த மர்மமும் இல்லை" - நெல்லை மாணவி தற்கொலை கடிதத்தில் உருக்கம்...!

author img

By

Published : Jul 27, 2022, 4:20 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று (ஜூலை 26) மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கூலித்தொழிலாளியான தனது தந்தை, தனக்கு கல்லூரிக்கட்டணம் செலுத்த சிரமப்பட்டதைப்பார்த்து மனமுடைந்து மாணவி தற்கொலை செய்ததாகத்தகவல் வெளியானது.

இந்நிலையில், மாணவி எழுதி வைத்த தற்கொலைக்கடிதத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், "எனக்காக மத்தவங்க கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியல... எனக்கு காலேஜ் பீஸ் கட்டறதுக்கு அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்படுறாங்க... இப்ப கூட பீஸ் கட்டத்தான் போய்ருக்காங்க... மத்தவங்கல கஷ்டப்படுத்த கூடாதுன்னுதான் இந்த முடிவு... என் சாவுல மர்மம் இருக்க கூடாதுன்னுதான் இந்த லெட்டர், வேறு எதுவும் காரணம் இல்லை... " என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அண்மையில் பள்ளி மாணவர்களின் தற்கொலைகள் தொடர்வதாலும், அதில் பல சந்தேகங்கள் நீடிப்பதாலும், தனது மரணத்தால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில், தனது மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என மாணவி கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்கொலை தவிர்.. தலை நிமிர்ந்து வாழ்
தற்கொலை தவிர்.. தலை நிமிர்ந்து வாழ்

கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தான் ஆசைப்பட்ட படிப்பைப் படிக்க பணம் ஒரு பிரச்னையாக இருப்பதால், தனது பெற்றோர் பாதிக்கப்படக்கூடாது எனக்கருதி மாணவி எடுத்த இந்த முடிவு அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"படிப்பு செலவுக்காக கஷ்டப்படுத்திட்டேன்" - பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.