திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நேற்று முதல் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
நேற்று முதல் நாள் என்பதால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இரண்டாவது நாளான இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன், 206ஆவது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் அவர் கேரளா மாநிலத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காகத்தான் இவ்வாறு போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர், ராஜ்ய சபா உள்ளிட்ட தேர்தல்களில் போட்டியிட்டிருப்பதாகவும் பல முறை தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.