திருநெல்வேலி: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக இன்று சென்னைக்கு சென்ற சிறப்பு ரயில் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது எஸ் 3 பெட்டியின் பிரேக் கட்டை உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து புகை வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலமாக ரயிலில் பாதுகாப்புக்கு இருந்த ரயில்வே காவலர்கள் உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். இதனால் பெஞ்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக சிறப்பு ரயில் அரைமணிநேரம் தாமதமாக சென்றது.
இதையும் படிங்க: மாஸ்டர் பட வெற்றி: கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!