தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் கூலி வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்ற டாட்டா ஏசி வாகனம் (குட்டி யானை) ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற பணியாள்கள் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்களில் சிலர் பாளையங்கோட்டை மருத்துவமனையிலும், சிலர் ஒட்டபிடாரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாகன ஓட்டுநரை கைது செய்து மணியாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபக்கம் சம்பவ இடத்திற்கு சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து ஒட்டபிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கண்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க;
'சாலை பாதுகாப்பு மாதத்திலும் விபத்துகள் தொடரும் அவலம்' - ஸ்டாலின் ட்வீட்