சென்னை : பாஜக எம்எல்ஏவின் கோரிக்கைக்கு துரைமுருகன் தனக்கே உரித்தான பாணியில் சட்டென பதிலளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருநெல்வேலி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, “திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மானூர் குளத்தை தாமிரபரணி ஆற்று தண்ணீரை கொண்டு நிரப்ப வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
பாஜக கோரிக்கை
மேலும், “தாமிரபரணி ஆற்றில் கோதையாறு, அரியநாயகிபுரம், திருவிடை மருதூர் ஆகிய மேற்கண்ட மூன்று பகுதிகளில் ஏதாவது ஒரு பகுதியில் பம்பிங் ஸ்டேஷன் மூலம் மானூர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
190 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த மானூர் குளத்தை நிரப்பினால் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் விவசாயிகள் மிகுந்த பயன் அடைவார்கள்” என்றும் தெரிவித்தார்.
துரைமுருகன் பதில்
இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், “மானூர் குளம் மேடான பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் கருணாநிதி ஆட்சியில் இந்தக் குளத்தை நிரப்பிக் காட்டினோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது, எனவே குளத்தை தண்ணீர் கொண்டு மீண்டும் நிரப்பி காட்டுவோம். இது தொடர்பாக தன்னிடமும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : கருணாநிதி படத்திறப்பு, அதிமுக புறக்கணிப்பு- துரைமுருகன் வேதனை