ETV Bharat / city

'பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்' - கனிமொழி எம்.பி., பேச்சு - தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி

வனப்பாதுகாப்புச்சட்டத்தின் மூலம் காடுகள் மலைப்பகுதிகளில் வாழ்ந்த 85% பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நெல்லை காணி மக்களின் வாழ்வியல் குறித்து ஆவணப்படம் வெளியீட்டு விழாவில் கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி
author img

By

Published : Mar 20, 2022, 3:32 PM IST

நெல்லை: தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து நடத்தும் 'பொருநை நெல்லை ஐந்தாவது புத்தகத் திருவிழா', பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இதன் மூன்றாம் நாளான இன்று (மார்ச் 20) நாடாளுமன்றக்குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி., மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை நாகரிகம் குறித்த அகழாய்வு அரங்கு மற்றும் பழங்காலப்பொருட்களைப் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து, விழாவில் நெல்லை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் பழங்குடியின 'காணி இன மக்களின் வாழ்வியல்' குறித்த குறும்படம் வெளியிடப்பட்டது.

காணி இன மக்களின் வாழ்வியல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி, 'இந்தப் புத்தகத் திருவிழாவில் மலைவாழ் மக்களான காணி இன மக்களின் வாழ்வியல் குறித்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் மலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலை நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இயற்கையோடு ஒட்டியது

நெல்லையில் கனிமொழி எம்பி பேச்சு

பழங்குடியின மக்களின் வாழ்வியலை நாம் பாதுகாக்க வேண்டும். அதுபோன்று வளர்ச்சித் திட்டங்களைக்கொண்டு வரும் நிலையில் காடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காத அளவிற்கு, நம் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பழங்குடியின மக்கள் வாழ்ந்தால் தான் காடுகள் பாதுகாப்பாக இருக்கும். அவர்கள் வாழ்க்கை முறை இயற்கையோடு ஒட்டியது. வனப்பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் காடுகளில் வாழும் 85 % பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் காணி மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. அவர்கள் இயற்கையை ஏற்றுக்கொண்டு இயற்கை மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களின் வாழ்வியல் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பாரம்பரியம், பண்பாடு என்பது அனைவருக்கும் சொந்தம். அகழாய்வு செய்து நம் வாழ்க்கை எப்படி கண்டு எடுக்கிறோமோ, அதுபோன்று அடுத்த தலைமுறைக்கு நமது மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.

பழங்குடியினரே வனப்பதுகாவலர்கள்

முன்னதாக தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பேசுகையில், 'நெல்லை மாவட்டத்திற்கு நெடிய வரலாற்றுச் சிறப்புக்கள் அதிகம் உள்ளன. இதில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் காணி இன மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி இருப்பது மிகுந்த சிறப்பம்சமாகும்.

பழங்குடியின மக்கள் இல்லை என்றால் காடுகள் இல்லை; உலகம் தோன்றிய காலம் முதல் பழங்குடியின மக்கள் காடுகள், வனப்பகுதிகளில் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். பழங்குடியின மக்கள் அறிவு சார்ந்த பெரும் மக்களாகவும் இருந்துள்ளனர். அதற்கு உதாரணம், நீராவி குளியல் என்பதைச் சொல்லலாம்.

புத்தக வாசிப்பு

ஆனால், பழங்காலத்தில் அவர்கள் நீராவி குளியல் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணி உள்ளனர். காட்டை, நமது பண்பாட்டைக் காப்பாற்றும் காணி மக்களுக்கு இந்த விழா வாயிலாக நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத் திருவிழா என்பது கலைஞர் கண்ட கனவு. புத்தக வாசிப்பு என்பது நம்மை ஒவ்வொரு நொடியும் உயிர்ப்பிக்கும். எனவே, அனைவரும் புத்தகங்கள் வாசிக்கும் பண்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'நீதிமன்றம் தகவல்களைப் பரிமாறும் தபால் நிலையமாக செயல்பட முடியாது' - சென்னை உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.