ETV Bharat / city

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தும் கந்தூரி திருவிழா

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணத்தில் இஸ்லாமியர்களே இல்லாத ஊரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து கந்தூரி திருவிழாவை நடத்துகின்றனர். மதநல்லிணக்க விழாவாக நடந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தும் கந்தூரி திருவிழா
இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தும் கந்தூரி திருவிழா
author img

By

Published : Aug 2, 2022, 11:46 AM IST

திருநெல்வேலி: நான்குநேரி அருகே உள்ளது தெற்கு விஜயநாராயணம். இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 16 ஆம் தேதி மேத்தப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கந்தூரி விழாவை இவ்வூரில் உள்ள இந்துக்களே நடத்துகின்றனர். விழாவிற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் விஜயநாரயணத்திற்கு வருவது வழக்கம்.

முற்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இந்துக்களும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் ஆடி மாதம் 16 ஆம் தேதி மேத்த பிள்ளை என்ற முஸ்லீம் கொலை செய்யப்பட்டார்.

அவருக்கு உதவி புரிய வந்த பாளையங்கோட்டை பட்டாணி சாகிப்பும் உயிரிழந்ததாகவும் அவர்கள் இருவர் நினைவாக தர்கா எழுப்பப்பட்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் ஆயிரக்கணக்கானோர் கந்தூரி விழாவில் கலந்து கொண்டனர். கிராமத்தில் உள்ள இந்துக்கள் தங்கள் வீட்டு விழா போன்று முன்னின்று நடத்தினர்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து நடத்தும் கந்தூரி திருவிழா

மேலும் விழாவிற்கு முஸ்லீம்களை விருந்தாளிகளாக தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து விருந்து உபசரணைகளும் செய்கின்றனர். இங்குள்ள பல இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தர்காவின் பெயரிலேயே மேத்தப்பாண்டியன், மேத்தா என்று பெயர்கள் சூட்டியுள்ளனர். இவ்வாறு கொண்டாடப்படும் இந்த கந்தூரி விழா மதநல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இதையும் படிங்க: அரசு பிரியாணி திருவிழாவில் பீஃப் பிரியாணியைத் தவிர்க்கக்கூடாது - ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.