ETV Bharat / city

முறைமாறி திருமணம்: கணவன் கொலை, மனைவி தற்கொலை - husband murder, wife suicide

திருநெல்வேலி: முறைமாறி திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொலை செய்யப்பட்டதால், அவரது மனைவி மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

husband-murder-wife-suicide-in-thirunelveli

author img

By

Published : Dec 13, 2020, 6:19 PM IST

திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையைச் சேர்ந்த சுடலைராஜ் என்பவரது மகன் காளிராஜ். அவரது தாயார் உயிழந்த நிலையில், அவரை சுடலைராஜின் சகோதரர் இசக்கிமுத்து என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்தார்.

அப்போது அவருக்கும் இசக்கிமுத்துவின் மகள் மேகலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அண்ணன் தங்கை உறவு என்பதால், அவர்களை வீட்டில் கண்டிக்கவில்லை. அதனால் இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதும், வருவதுமாக இருந்தனர். ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ஓராண்டுக்கு முன்பு மறைமுகமாக திருமணம் செய்து கொண்டனர். அதனையறிந்த, வீட்டார் இருவரையும் கண்டித்துள்ளனர். அதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி பாளையங்கோட்டையை அடுத்த ரஹ்மத் நகரில் வடித்து வந்தனர்.

இந்த நிலையில், டிச.11ஆம் தேதி இரவு காளிராஜ் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதுகுறித்த விசாரணையில், மேகலாவின் தந்தை இசக்கிராஜ் மற்றும் அவரது மகன் இருவரும் காளிராஜை கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் தேடிவரும் நிலையில், பாதுகாப்பு கருதி மேகலாவை உறவினர்கள், பாளையங்கோட்டை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

ஆனால், இன்று மேகலா தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.