ETV Bharat / city

நாங்குநேரி வாக்காளர்களுக்கு கோடான கோடி நன்றி! - நாம் தமிழரை முந்திய சுயேச்சை - Hari Nadar Thanks to Nanguneri Voters

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஹரி நாடார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Hari Nadar in Nanguneri
author img

By

Published : Oct 25, 2019, 4:33 AM IST

Updated : Oct 26, 2019, 7:40 PM IST

நாங்குநேரி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் நான்காயிரத்து 242 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.

இது குறித்து ஹரிநாடார், பெருந்தலைவர் காமராஜர் வழியில் நேர்மையாக தேர்தலை சந்தித்தோம். திமுக, அதிமுக கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுள்ளன. எனக்கு வாக்களித்த சமுதாய, தொகுதி மக்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.

நாங்குநேரி வாக்காளர்களுக்கு ஹரி நாடார் நன்றி

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. திமுக ஆதரவில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தோல்வி அடைந்தார். நோட்டா ஐந்தாவது இடத்தை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராதாபுரம் வெற்றியோடு திமுகவிற்கு 3 வெற்றிகள் - தயாநிதிமாறன்

Intro:கட்சி தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார். அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்.Body:கட்சி தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார். அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் தொங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 33,445 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார் இரண்டாவது இடத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் ரூபி மனோகரன் 61,932 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக கூட்டணிக்கு பிறகு மூன்றாவது இடத்தில் வைத்து பேசப்பட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜ நாராயணன் மூன்றாவது இடத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன் கட்சி ஆரம்பித்து நாடார் சமூகத்தை மட்டுமே பெரிதும் நம்பி பெட்டியிடுகின்றேன் என்று கூறி நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பனங்காட்டுப்படை கட்சியை சேர்ந்த ஹரி நாடார் 4242 வாக்குகள் எடுத்து அதிமுக, திமுகவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதனால் 3,494 வாக்குகள் எடுத்து நாம் தமிழர் கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடார் சமூகத்தை அதிக அளவில் கொண்ட நாங்குநேரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்படாமல் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது அரசியல் வட்டாரங்கள் கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அதிமுக திமுகவிற்கு மாற்று என்று கூறி பிரச்சாரத்தினை முன்வைத்த நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தலில் இவ்வாறு குறைந்த வாக்குகள் அடைந்து பின்தங்கியது நாம் தமிழர் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியினை தந்துள்ளது.

இதுகுறித்து ஹரி நாடார் கூறுகையில்,

நான் காமராஜர் வழியில் நேர்மையாக இந்த இடைத்தேர்தலை சந்தித்தேன். தேர்தல் ஆணையம் அதிமுக திமுகவை எவ்வாறு பணத்தை வழங்க அனுமதித்ததோ அதேபோல் எங்களுக்கும் அனுமதி வழங்கியிருந்தால் அவர்களை விட அதிகம் பணம் கொடுக்கும் வலிமை எங்களிடம் உள்ளது. இந்த வெற்றியை தந்த நாங்குநேரி தொகுதி நாடார் சமுதாய மக்களுக்கும் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Oct 26, 2019, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.