ETV Bharat / city

பாதாள சாக்கடையாக மாறிய பறவைகளின் நன்னீர் குளம்...பொது மக்கள் வேதனை - Nellai Corporation

பறவைகளின் வாழ்விடமாக இருந்த நன்னீர் குளம், பாதாள சாக்கடையாக மாறியுள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 21, 2022, 1:28 PM IST

Updated : Sep 22, 2022, 11:28 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஆனால், இங்கு மாநகராட்சி சார்பில் சாலை குடிநீர் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால், மேலப்பாளையத்தில் பெரும்பாலான தெருக்களில் கழிவுநீர் ஓடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக, இங்கு சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் சிறுபான்மையின வேட்பாளர்களை முன்னிறுத்தி சாதுர்யமாக வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சியின் அலட்சியத்தால் மேலப்பாளையத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னிமார் குளம் சாக்கடையாக மாறிவரும் அவலம் மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

அதாவது 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கன்னிமார் குளம், மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த குளத்தில் சுத்தமான தண்ணீர் இருந்ததால் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும் நன்னீர் குளமாக இருந்தது.

குளத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஹாமின் புரத்தில், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட இந்த பாதாள சாக்கடை திட்டத்தால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் அனைத்து கழிவு நீரும் தற்போது கன்னிமார் குளத்தில் கலக்கிறது.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம்

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து, குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீரை தண்ணீராக மாற்றும் மையத்தில் விடுகின்றனர். ஆனால், இந்த மையம் திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டதால், இங்கு வரும் கழிவுநீர் அனைத்தும் நிரம்பி நேராக குளத்தில் கலக்கிறது.

இது தவிர பொது மக்களும் பொறுப்புணர்வு இல்லாமல் குப்பைகளை குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் கன்னிமார் குளத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தற்போது, குளம் முழுவதும் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது.

இது குறித்து மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் கூறும் போது, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றன. ஆனால், தற்போது குளம் சாக்கடையாக மாறிவிட்டது. ஹாமீன் புரத்தில் உள்ள வீட்டுக் கழிவறை கழிவுகள் அனைத்தும் குளத்தில் தான் கலக்கின்றது.

இதனால், காற்று மூலம் நோய்க்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. கரோனாவுக்கு அடுத்து மிகப் பெரும் நோயை நாமே இங்கு உற்பத்தி செய்து வருகிறோம். ஆட்சி மாறினால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், கடந்த ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி மேலப்பாளையம் சாக்கடை பிரச்சனையை தீர்க்க யாரும் முன்வரவில்லை. ஆட்சிகள் மாறினாலும் சாக்கடைகள் மாறவில்லை. ஆட்சியாளர்கள் ஏசியில் இருக்கிறார்கள் நாங்கள் சாக்கடையில் இருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் அப்துல் ஜபார் கூறும்போது, மேலப்பாளையம் பகுதியில் நீர்மட்டத்தின் ஆதாரமாக கன்னிமார் குளம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலில் வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த குளத்தை சீரமைத்து தருவதாக கூறுகின்றனர். ஆனால், 30 தெருக்களின் மொத்த சாக்கடையும் இந்த குளத்தில் தான் கலக்கிறது.

பாதாள சாக்கடை திட்டம் தோல்வியடைந்ததால், கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. ஒரு காலத்தில் இந்த குளத்தில் செங்கா நாரை கூழ நத்தம் போன்ற வெளிநாட்டு பறவைகள் வந்து சென்றன. மேலும், மக்கள் குளிப்பதற்கும் விவசாய பாசனத்திற்கும் இந்த குளம் பயன்படுத்தப்பட்டது.

ஆனால், தற்போது துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் கொள்ளை நோய் ஏற்படுவதற்குள் அரசு இந்த குளத்தை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நெல்லை ஆட்சியர் விஷ்ணு தற்போது நெல்லை நீர்வளம் என்ற பெயரில் குளங்களை சீரமைத்து வருகிறார். எனவே, மாநகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கன்னிமார் குளத்தையும் ஆட்சியர் சிறப்பு பார்வையில் சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கோவில்பட்டி அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளி கழிவறையில் தற்கொலை...

Last Updated : Sep 22, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.