ETV Bharat / city

30 ஆண்டுகளுக்கு பிறகு  தார்சாலை பார்க்கும் மலைக்கிராமம்..! - சேலம் மாவட்ட நிர்வாகம்

சேலம்: 30 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் இருக்கும் கோவிலூர் மலைக் கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

yercaud-kovilur-road-works-starts-
author img

By

Published : Jun 27, 2019, 9:11 AM IST

சேலம் மாவட்டம், ஏற்காடு அடுத்த கோவிலூர் மலைகிராம மக்கள் சாலை அமைத்துத் தரக்கோரி 30 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்குமுறை சாலையமைக்க பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஈடிவி பாரத் செய்தியில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி சாலை வசதியில்லாமல் இருக்கும் கோவிலூர் கிராாமத்திற்கு சாலை அமைத்துக் கொடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கோவிலூர் கிராமத்திற்கு செல்லும் பாதையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலை பணி விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மழையை காரணம் காட்டி கடந்த காலங்களை போன்று சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடக் கூடாது எனவும், அப்பகுதி மக்கள் அலுவலர்களிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மலைக்கிராம சாலையை ஆய்வுச் செய்யும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்

Intro:சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சுற்றுலா தளத்தை அடுத்த கோவிலூர் மலைக்கிராம பகுதிக்கு தார்ச் சாலை அமைக்கும் பணிகளை சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Body:ஏற்காடு அடுத்த கோவிலூர் மலைகிராம பகுதிக்கு சாலை வசதி வேண்டி கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் நான்கு முறை கோவிலூர் பகுதிக்கு சாலை அமைக்க சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை வசதி கோவிலூர் மக்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நம்மிடம் புகார் தெரிவித்து சாலை வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து கோவிலூர் மக்களின் சாலை வசதி கோரிக்கை தொடர்பாக கடந்த 7-ம் தேதி இ - டிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. செய்தியின் எதிரொலியாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக கோவிலூர் சாலைப் பணியை தொடங்க வேண்டும் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கோவிலூர் சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரடுமுரடான கோவிலூர் பாதையை சீரமைக்கும் பணியையும் இன்று நேரில் பார்வையிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Conclusion:மிக விரைவில் தார்ச்சாலை அமைய வேண்டும் என்று கோவிலூர் மலைகிராம மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலை பணி விரைந்து நடைபெற வேண்டும் என்றும் மழையை காரணம் காட்டி முந்தைய காலம் போல சாலை அமைக்கும் பணி நின்று விடக்கூடாது என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.