ETV Bharat / city

மேம்பாலத்திலிருந்து குதித்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு - salem woman suicide issue

சேலம் மாவட்டத்தில் ஈரடுக்கு மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

helpline regarding suicide thoughts
தற்கொலை எண்ணத்தக் கைவிடுங்கள்
author img

By

Published : Dec 11, 2021, 9:38 AM IST

சேலம்: இரும்பாலை அருகேயுள்ள வீரகாரன் கோயில் தெருப் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). இவர் இரும்பாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிவருகிறார்.

இவரது மனைவி சுதா (30). இவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. சுதா, சேலம் ரயில்வே ஜங்சன் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவருவது வழக்கம்.

helpline regarding suicide thoughts
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுங்கள்

தற்கொலை முயற்சி

இந்நிலையில், நேற்று மாலை தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுவந்த சுதா, ஐந்து சாலைப் பகுதியில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்துள்ளார்.

சுமார் 60 அடி உயரத்திலிருந்து குதித்ததால் படுகாயம் அடைந்துள்ளார். சாலையில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சுதா உயிரிழந்தார். இது குறித்து அழகாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையின்மை காரணமாக, டெஸ்ட்டியூப் முறைப்படி குழந்தை பெற்றுக்கொள்ள சுதா முயன்றுள்ளார்.

அது பலனளிக்காமல் போகவே, கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் சுதா இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.