காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து, வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது, குறுவை, சம்பா சாகுபடி நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை, 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், காவிரி கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், பழைய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத் தேவைக்கும், மேட்டூர் அணையிலிருந்து நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 105.94 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 31 கன அடியாக உள்ளது. நீர் இருப்பு 72 ஆயிரத்து 753 டிஎம்சி ஆக உள்ளது. தற்போது நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அடுத்தடுத்த நாட்களில், நீர்மட்டம் சரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கல்லணையில் இன்று 707 கனஅடி தண்ணீர் திறப்பு!