ETV Bharat / city

சேலம் மாநகராட்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் திடீர் சோதனை - லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

சேலம்: மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் இன்று (ஏப்.16) காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

vigilance raid at corporation officer house
சேலம் மாநகராட்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்தறையினர் திடீர் சோதனை
author img

By

Published : Apr 16, 2021, 7:08 PM IST

சேலம் மாநகராட்சி நகர்நல அலுவலராக பார்த்திபன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சேலம் நகர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள இவரது வீட்டில், லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் இன்று (ஏப். 16) காலை 8 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து ”புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. முழு விவரம் பின்னர் அறிவிக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பார்த்திபன் ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய போது, 2017- 2018ஆம் ஆண்டு வரை மருந்துகள் வாங்குவதில் பார்த்திபன் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனை மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் பேரில் 2 கோடி வரை சுருட்டிய நபர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.