ETV Bharat / city

காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை..! - Karnataka border

சேலம்: காவிரியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு - கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள கோபிநத்தம் உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல கர்நாடக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கர்நாடக எல்லை
author img

By

Published : Aug 13, 2019, 3:34 AM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ், கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நேற்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. மேலும், மூன்று லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மூன்று நாட்களில் 32 அடி உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93 அடியை எட்டியுள்ளது. கடந்த 58 ஆண்டுகளுக்குப்பின் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பொதுமக்கள் வெள்ள எச்சரிக்கையால் பீதியில் உள்ளனர்.

காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல கர்நாடக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மேட்டூர் அணை அமைந்துள்ள காவிரி கரையோர பொது மக்கள் வெள்ளத்தின் தன்மை கருதி பரிசல் இயக்கவோ அல்லது கரையோரங்களில் மீன் பிடிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுபோல கர்நாடக வனத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபிநத்தம் கிராமத்திற்குப் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தத் தடை விதிப்பால் ஒகேனக்கல் செல்ல விரும்பும் கர்நாடக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் பாலாறு கிராமத்தோடு திரும்பி மேட்டூர் அல்லது மைசூர் செல்கின்றனர்.

Intro:காவிரியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள கோபிநத்தம் உள்ளிட்ட காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல கர்நாடக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Body:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ், கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நேற்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

இதனால் இன்று மூன்று லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மூன்று நாட்களில் 32 அடி உயர்ந்து தற்போது 93 அடியை மேட்டூர் அணையின் நீர்மட்டம் எட்டி உள்ளது .இது சென்ற 58 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள நிலைமை என்பதால், தமிழக கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணை அமைந்துள்ள காவிரி கரையோர பொது மக்கள் வெள்ளத்தின் தன்மை கருதி பரிசல் இயக்கவோ அல்லது கரையோரங்களில் மீன் பிடிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதுபோல இன்று மதியம் முதல் கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபிநத்தம் கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழக எல்லையான பாலாறு வனப்பகுதி வழியாக கோபிநத்தம் சென்று அங்கிருந்து ஒகேனக்கல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கர்நாடக வனத்துறையினரின் இந்த தடையால், திரும்பி வருகின்றனர்.

இந்த படை விதிப்பால் ஒகேனக்கல் செல்ல விரும்பும் கர்நாடக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் பாலாறு கிராமத்தோடு திரும்பி மேட்டூர் அல்லது மைசூரு செல்கின்றனர்.

Conclusion:காவிரியில் பல லட்சம் கன அடி நீர் தொடர்ந்து வருவதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் தற்போது 93 அடியை எட்டி உள்ளது.

நாளை காலை 8.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.