தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(செப்.05) இரவு பெய்த இடைவிடாத கனமழையின் காரணமாக ஏற்காடு மலைப்பாதையான 60 அடி பாலம் மற்றும் 40 அடி பாலம் அமைந்துள்ள மலை பாதைகளில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தொடர் மழையின் காரணமாக மலைப்பாதைகளில் ஆங்காங்கே காற்று வெள்ளமும் ஏற்பட்டது . இதனை அடுத்து ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. இரவு முதல் 30-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பாறைகள் பெரிய அளவில் உள்ளதால் அதை பகுதி பகுதியாக உடைத்து எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நேற்று இரவு முதல் சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு குப்பனூர் சாலை வழியாக செல்ல திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
உச்சபட்சமாகச் சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு நீர் காட்டில் 58 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதைச் சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது...? அதிசய "நாக்டூன்" கிழங்கு...