இது தொடர்பாக சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநில நபர்கள் 400 பேர் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளைக் கடத்த திட்டமிட்டுள்ளனர் என்று சமூக வலைதளங்கள், குறுஞ்செய்தி மூலமாகத் தவறான செய்தி வேகமாகப் பரவிவருகிறது.
இது முற்றிலும் பொய்யான செய்தி. இதைப் பொதுமக்கள் யாரும் நம்பி பீதியடைய வேண்டாம். ஏற்கனவே 2018, 2019ஆம் ஆண்டுகளில் இதுபோன்ற ஆடியோ, வீடியோ பதிவு பரவியிருந்தது. அதை முழுமையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல சிலர் தற்போது இந்தச் செய்திகளைப் பரப்பிவருகின்றனர். இது சட்ட விரோதமாகும்.
இந்தச் செய்திகளைப் பரப்புவது குறித்தும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகப் பொதுமக்கள் சேலம் மாநகர காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் கடத்தல் கும்பல்: பொய்ச்செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை
சேலம்: சேலத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஊடுருவி உள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.