ETV Bharat / city

தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஒருவர்காயம் - hotel cylinder fire in salam

சேலம்: முள்ளவாடி கேட் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

சேலம்: முள்ளவாடி கேட் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிர்தப்பினார்.ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

author img

By

Published : Feb 18, 2020, 6:47 PM IST

சேலம் பகுதியில் உள்ள முள்வாடி கேட் அருகே தனியார் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை உணவு விடுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உணவு விடுதியிலிருந்து புகை வருவதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ அதிகமானதால் உடனடியாக தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது சமையல் மாஸ்டரான ராஜேந்திரன் என்பவர் உணவு விடுதியில் இருந்து மூன்று சிலிண்டர்களை வெளியே எடுக்க முயன்றபோது எரிந்து கொண்டிருந்த ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்தது.

தனியார் உணவு விடுதியில் தீ விபத்து

இதில் உடம்பில் சிறுகாயங்களுடன் ராஜேந்திரன் உயிர் தப்பினார். பின் அவரை மீட்ட தீயணைப்பு வீரா்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர்.

இதையும் படிக்க:உடலை வருத்தி உழைக்கிறோம்... இன்னும் தீபாவளி போனஸ் கிடைக்கலை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.