ETV Bharat / city

கூண்டுக்குள் உள்ள அம்பேத்கரை மீட்டெடுங்கள் - தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை! - SE KU TAMILARASAN PRESS MEET

தமிழ்நாடு முழுவதும் கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைகளை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்தார்.

PRESS MEET
PRESS MEET
author img

By

Published : Apr 14, 2022, 8:04 PM IST

சேலம்: இந்திய குடியரசு கட்சியின் சேலம் மண்டல செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், சேலம் மரவனேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு‌. தமிழரசன் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் அம்பேத்கரின் சிலை கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர், கூண்டுக்குள் இருக்கும் அம்பேத்கரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்பேரவையில், வரும் வாரத்தில் ஆதி திராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை அல்லது காவல்துறை மானியக்கோரிக்கை ஆகிய ஏதாவது ஒன்றில், சாதிய ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டத்தை நிறைவேற்றினால், அம்பேத்கருக்கு செலுத்துகின்ற மிகப்பெரிய காணிக்கையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று முதல் 61 நாட்கள் மீன் பிடிக்கத்தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.