ETV Bharat / city

'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு - Traditional cuisine restaurant

சேலம்: ஓமலூர் அருகே உள்ள அழகப்பன் கிராமத்து ஹோட்டலில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. அந்த உணவகம் குறித்த சிறப்பு தொகுப்பு.

'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு

author img

By

Published : Feb 23, 2020, 8:02 PM IST

Updated : Feb 24, 2020, 8:58 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கிராமத்து பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது அழகப்பன் கிராமத்து ஹோட்டல். சுற்றுவட்டார மக்களுக்கு அமுதா அக்கா கடை அல்லது ராகி களி, கறிக் குழம்பு கடை என்றால் வெகு பிரசித்தம். 25 ரூபாய்க்கு ஒரு உருண்டை கேழ்வரகு களி, சுவைமிக்க நாட்டுக்கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு , குடல் குழம்பு, மீன் குழம்பு கிடைப்பது இந்தக் கடையின் சிறப்பம்சம்.

அசைவத்தின் உச்சபட்ச சுவையை ருசிக்க விரும்பும் அசைவ உணவு பிரியர்களுக்கு இந்த கிராமத்து உணவுக் கடை ஏற்றதொரு இடம் என்பது இங்கு அடிக்கடி சாப்பிடும் வாடிக்கையாளர்களின் கருத்து.

கிராமத்து உணவு தயாரிப்பின் நுட்பங்களை, இந்தக் கால இல்லத்தரசிகள் மறந்துவிட்ட சூழலில், தமிழர்களின் பாரம்பரியமான உணவை, முன்னோர்களின் நுட்பத்தில் கேழ்வரகு களி உருண்டை வாடிக்கையாளர்களின் கண்முன்னே தயாரிக்கப்பட்டு சுடச்சுட வாழை இலைகளில் பரிமாறுகிறார்கள் அழகப்பன் கடை ஊழியர்கள்.

பல வகையான கறிக்குழம்புகள்
பரிமாறத் தயாரான பல வகையான கறிக்குழம்புகள்

அதுமட்டுமல்லமால், இங்கு பரிமாறப்படும் முட்டை பணியாரம், சாமைச் சோறு, கருவாட்டு குழம்பு, சைவ வகை குழம்புகளும் பிரமாதம் தான். வீட்டு முறையில் அன்றாடம் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களில் பக்குவமான முறையில் இந்த குழம்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகிறது.

களி கிண்டல்
களி கிண்டல்

குளிர்சாதன அறைகளில் ஹைஜீனிக் ஃபுட் சாப்பிட்டோம் என்று கூறிக்கொண்டு உள்ளே,' அப்படி ஒன்றும் சுவையானதாக இல்லை என்ன செய்ய சிட்டியில் இப்படித்தானே கிடைக்கிறது' என்று புலம்புவோருக்கு இந்த அழகப்பன் கிராமத்து உணவு கடை நிச்சயம் நல்ல சுவையை தரும்.

அழகப்பன் கிராமத்து ஹோட்டல் - சிறப்பு தொகுப்பு

பெங்களூரிலிருந்து சென்னையிலிருந்து அடிக்கடி கார்களில் வந்து வாடிக்கையாளர்கள் எங்களது கேழ்வரகு களி, கருவாட்டு குழம்பு, அசைவ குழம்பு வகைகளை விரும்பி ருசித்து உண்டு விட்டு எங்களை பாராட்டி செல்கின்றனர் என்று கடையில் பணிபுரியும் ஐந்து பெண்களும் ஒருசேர கூறுவதிலிருந்தே தெரிகிறது இந்த கிராமத்து கடையின் பெருமை.

இதையும் படிங்க;

'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..!

Last Updated : Feb 24, 2020, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.