ETV Bharat / city

'தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடவடிக்கையை கைவிட வேண்டும்' - salem

சேலம்: தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்து வருவதால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும் படையினர் சோதனை நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் சேலம் வெள்ளி தொழிலாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தேர்தல் பறக்கும் படையினர்
author img

By

Published : Apr 3, 2019, 1:18 PM IST

17ஆவது நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கவும், பரிசு மற்றும் ஆதாரத்துடன் கூடிய உதவிகளை செய்வதை தடுக்கும் வகையிலும் மாவட்ட தேர்தல் அலுவலரின் உத்தரவின்பேரில் பறக்கும் படைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

இதனடிப்படையில் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகளை பறிமுதல் செய்துவருகின்றனர். இதனால் வெள்ளி தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், தங்களது தொழிலை செய்ய முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக சேலம் வெள்ளி கைவினைஞர்கள், பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், 'தேர்தல் நேரம் என்பதால் தங்களது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்படும் வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர்பறிமுதல் செய்கின்றனர். தங்களின் தொழிலில் அவரச அவசியத்தை கருத்தில் கொண்டு தேர்தல் பறக்கும் படை சோதனை நடவடிக்கையை கைவிட வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது என்றும், சிறு மற்றும் குறு தொழிலாளிகள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.

பறக்கும் படையினர் சோதனையை கைவிட சேலம் வெள்ளி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Intro:தேர்தல் களத்தில் வாகன சோதனை என்ற பெயரில் வெள்ளித் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்யும் பறக்கும் படை நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி சேலத்தில் வெள்ளி உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

Body:நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யார் பணம் கொடுத்தாலும் வெள்ளி வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பணம் பெற மாட்டோம் எனவும் உறுதி.

நடைபெற உள்ள 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கவும் பரிசு மற்றும் ஆதாரத்துடன் கூடிய உதவிகளை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் பறக்கும் படைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வெள்ளி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் தொழிலை மேலும் செய்ய முடியாத அளவிற்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சேலம் வெள்ளி பூ மிசின் கைவினைஞர்கள் பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர பணியாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சோதனை என்ற பெயரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் வெள்ளி மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப் படுவதாகவும் இதனால் வெள்ளி தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தங்களின் தொழிலில் அவசர அவசியம் பறக்கும் படை நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மேலும் கடந்த காலங்களில் மத்திய அரசு நடவடிக்கை காரணமாக தங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டது என்றும் சிறு மற்றும் குறு தொழிலாளிகள் ஜிஎஸ்டி நாள் பாதிக்கப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேட்டி- ரவி, சங்கத் தலைவர்

Conclusion:எனவே எனவே நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் செயல்பட போவதாகவும் ஓட்டுக்காக யார் பணம் கொடுத்தாலும் வெள்ளி தொழிலாளர்கள் யாவரும் பணத்தை பெற மாட்டோம் என உறுதி எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.