சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த இடையப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன்(40). இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா, ஜெயப்பிருந்தா ஆகிய இரு மகள்களும், கவிப்பிரியன் என்ற மகனும் உள்ளனர்.
இவர், இடையபட்டி- வாழப்பாடி பிரிவு சாலையில், மளிகைக் நடத்தி வந்தார். இந்த நிலையில், முருகேசன் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று ( செவ்வாய்க்கிழமை) காலை வெள்ளிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளார்.
மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது,
கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணி மேற்கொண்டிருந்த போலீஸார், தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடமும் அவர் விசாரணை நடத்தி வருகிறார். இதனைத்தொடர்ந்து முருகேசன் மீது தாக்குதல் நடததிய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க :'அணில விடுங்க... அதிமுகவிடம் கேள்வி கேளுங்க' - ராமதாஸுக்கு செந்தில் பாலாஜி பதிலடி