ETV Bharat / city

சேலத்தில் சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு - Salem dye workshops

சேலத்தில் அனுமதியின்றி இயங்கியதாக சாயப் பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Salem dye workshops
Salem dye workshops
author img

By

Published : Jul 27, 2021, 8:49 AM IST

சேலம் : சேலத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் அனுமதி இன்றி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உரிய அனுமதி இல்லாமலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமலும் செயல்பட்டு வந்த காமராஜ் சாயப்பட்டறை, குமார், கல்யாணசுந்தரம், வைத்தி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் சாயப்பட்டறைகள் கண்டறியப்பட்டன.

Salem dye workshops
சேலத்தில் சாயப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
இதையடுத்து அந்த 5 சாயப்பட்டறைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் வீட்டு உபயோகம் மற்றும் குடோன்களுக்கு மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறைகளை நடத்தினால் அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க : சாயப்பட்டறை இயங்கிவந்த வீட்டின் அறைக்குச் சீல்வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.