சேலம் மாநகர மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளரும், செவ்வாய்ப்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர். ராமராஜின் இல்லத் திருமண விழா சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மணமகன் மனோஜ்குமார் மணமகள் சுபஸ்ரீ ஆகியோரை வாழ்த்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆர்.ராமராஜின் குடும்பத்தினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையும் படிங்க : வால்பாறையில் செக் டேம் விரிவுபடுத்தும் பணி தீவிரம்!