பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர் மோடி இன்று சேலம் வந்தார். பிரதமரின் மக்கள் நலத்திட்ட பிரச்சார இயக்கத்திற்காக வந்த அவர், குரங்குச்சாவடியில் உள்ள அய்யப்பன் கோவிலில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ குஜராத் மாநிலத்தில் இருந்து 700 ஆண்டுகளுக்கு முன்பே சௌராஷ்ட்ரா மக்கள் புலம்பெயர்ந்து வந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் வசிப்பதை அறிந்து கொண்டேன்.
பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நடவடிக்கைகளில், தமிழக மக்களின் பங்கு மகத்தானது. மேலும் இந்தத் திட்டத்தின் வாயிலாக அனைத்து இந்தியர்களையும் இணைத்து பயன் பெற வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 2022 ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அனைவருக்கும் வீடு இருக்கும் நிலை ஏற்படுவது போல, இத்திட்டமும் பலனளிக்கும் “ என்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரகலாத் மோடி, பின்னர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிகழ்வில் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டு...