சேலம் மாவட்டத்தில், குறிப்பாக ஐந்து ரோடு பகுதியில் சாலை நெரிசல், வாகன விதிமீறல்கள் அதிகளவில் உள்ளன. இதனைக் கட்டுப்படுத்த புதிய தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், இனி வாகன எண் கொண்டு முகவரியை அறிந்து, அலைபேசிக்கு நேரடியாக அபராதம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.
நவீன கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஓட்டுநர் பெயரில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனம் விதிமீறலுக்காக புகைப்படம் எடுக்கப்பட்டு, உரிய காவல் துறை அலுவலரால் வழக்குப்பதிவு செய்யப்படும். விதிமீறலை ஒப்புக்கொண்டால் இணையவழி மூலம் அல்லது நீதிமன்றம் வாயிலாக அபராதத் தொகையை செலுத்தலாம்.
மேலும், மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 133இன்கீழ் வாகன உரிமையாளர் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் குறித்த தகவல்களை அறிவிப்பு பெற்ற ஏழு நாள்களில் தெரிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் வாகன விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்த கலைஞர்கள்: இணையத்தில் 2,800 பேர் கூடி உலக சாதனை!