கோவையிலிருந்து சென்னைக்கு சேலம் வழியே நாள்தோறும் ‘இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சென்று வருகிறது. இந்த ரயிலானது கோவையில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு காலை 8.00 மணிக்கு வந்து பிறகு பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும்.
மீண்டும் சென்னையில் பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்து கோவைக்கு 10.15 மணிக்கு சென்றடையும். காலை நேரத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த ரயிலில் தற்போது அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகள் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும். எல்.எச்.பி. பெட்டியில் அதிக இருக்கைகள், பாதுகாப்பு வசதிகளுடன், மைக்ரோ ப்ராசசர் கட்டுப்பாடு, வெயில் மற்றும் குளிர் காலங்களில் ஒரே மாதிரியான வெப்பநிலை, பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வசதி மூலம் விபத்து சமயத்தில் பெட்டிகள் எளிதில் சேதமடையாத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 1951 முதல் தேர்தலையே சந்திக்காத கிராமம்!