ETV Bharat / city

உடல் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு; பொதுமக்கள் அதிர்ச்சி! - பெண் சடலம்

சேலம்: சத்திரம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில், பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த நிலையில் பெண் சடலம்
author img

By

Published : Jul 23, 2019, 7:39 AM IST

சேலம் சந்திப்பு தொடர்வண்டி நிலையத்திலிருந்து, நகர நிலையத்திற்குச் செல்லும் பாதையிலுள்ள தண்டவாளத்தில், நேற்று காலை 7 மணியளவில் பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் அலறிக்கொண்டு இருந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், உடனே செவ்வாய் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, எரிந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தின் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்தப் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் பெண்ணின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.

அப்போது அந்தப் பெண்ணின் பெயர் பச்சியம்மாள் என்பதும், வயது 63 என்றும், சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், பச்சியம்மாளுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த பச்சியம்மாள் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து சத்திரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகில் படுத்துக்கொண்டு, உடலுக்கு தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

Intro:

சேலத்தில் ரயில் பாதை அருகே உடல் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:

சேலம் சத்திரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் பெண் ஒருவர் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் சத்திரம் பகுதியில், சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து டவுன் ரயில் நிலையத்திற்கு செல்லும் ரயில் பாதை உள்ளது. இங்கு இன்று காலை 7 மணி அளவில் பெண் ஒருவர் உடல்எரிந்த நிலையில் அலறிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் உடனே செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு வந்து எரிந்து கொண்டிருந்த பெண்ணின் சடலத்தின் மீது தண்ணீர் கொட்டி தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் அந்தப் பெண் உடல் கருகி இறந்து விட்டார்.

பின்னர் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

பிறகு ஜங்ஷன் ரயில்வே போலீசாரும் சம்பவ இடம் வந்து உடல் கருகி இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

அப்போது அந்தப் பெண்ணின் பெயர் பச்சியம்மாள் என்றும் வயது 63 என்றும், சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

பச்சியம்மாள் அவரது குடும்பத்தார் இடையே நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இதில் மனம் உடைந்த பச்சியம்மாள் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து சத்திரம் பகுதியில் உள்ள ரயில் பாதை அருகில் படுத்துக்கொண்டு பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

Conclusion: பச்சியம்மாள் இறப்பிற்கு வேறு காரணம் உண்டா என்றும் அவரது குடும்பத்தினரிடம் பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.