சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான கோபியின் மகன் சுரேஷ், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தன் தந்தையுடன் சேர்ந்து, அவ்வப்போது தொழிலையும் பார்த்து வந்தார். நேற்று பிற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ், இரவுவரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர், தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும், எந்தப் பலனும் இல்லை.
இந்நிலையில், சேலம் மாநகரப் பகுதியில், கோபிக்குச் சொந்தமான வாகனக் கொட்டகை முன்பு இருசக்கர வாகனம் ஒன்று நீண்ட நேரமாக நின்றிருந்துள்ளது. இரவு 11 மணி ஆகியும், அந்த வாகனம் அங்கே இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கொட்டகையைத் திறந்து பார்த்துள்ளனர்.
அப்பொழுது அந்த வாகனத்தில், சுரேஷ் ஒரு பெண்ணுடன் நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அதிர்ந்து போன ஊர் மக்கள், இது தொடர்பாக சுரேஷின் பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வாகனத்தில் சடலமாகக் கிடந்த சுரேஷின் சடலத்துடன், அப்பெண்ணின் சடலத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Rbi Recruitment 2019 நல்ல சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை!
முதற்கட்ட விசாரணையில் சுரேஷுடன் பிணமாகக் கிடந்த பெண், சேலம் பகுதியைச் சேர்ந்த, வியாபாரி ஒருவரின் மகள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுரேஷும் - ஜோதிகாவும் காதலித்து வந்ததாகவும், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
![lovers corpse found corpse found nude in car salem latest news love failure tamilnadu latest crime news lovers suicide காரில் இறந்துகிடந்த காதலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4695719_loversdeathmystery.jpg)
அதனால் இருவரும் கடைசி நேரத்தில் உல்லாசமாக இருந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வாகனத்தில் உல்லாசமாக இருந்தபோது, மூச்சடைத்து உயிரிழந்தார்களா? ஆகிய கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்தில் நள்ளிரவில் இளம் ஜோடி சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.