ETV Bharat / city

அழிவு திட்டங்கள் குறித்து அரசு இரட்டை வேடம் - கி. வீரமணி காட்டம்!

சேலம்: ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார்.

கீ வீரமணி திராவிடர் கழக தலைவர், ki veeramani slams tamilnadu govt, veeramani slams tamilnadu govt for hydrocarbon issues
கீ வீரமணி
author img

By

Published : Jan 24, 2020, 5:33 PM IST

சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!

  • நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
  • சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
  • ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதாக கூறினார்.
  • தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது கேலி கூத்தாக உள்ளதாகவும், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது என்று கூறினார்.
  • ரஜினி பேசியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், அவ்வழக்கைச் சந்திக்க அவர் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் எனவும் இத்திட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி குற்றஞ்சாட்டினார்.
Body:
சேலத்திலுள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி
நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாலவும், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த நிலைகள் காணப்படுவதாகவும் இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் புதிய கல்வி கொள்கை மத்திய அரசு அமல் படுத்துவதற்கு முன்னதாகவே தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகவும் சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்ளையாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும்
5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வு என்பது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் குல கல்வியை மீண்டும் கொண்டு வரப்படுவதற்காக இந்த முயற்சி என கூறினார். ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதினால் போதாது இந்திட்டத்தினை எதிர்த்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் இத்திட்டத்தில்
மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேலி கூத்தாக உள்ளதாகவும், காவல்துறை அதிகார்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது ஆனால் பாஜகவினருக்கு மட்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டினார். ரஜினி காந்த் துக்ளக் விழாவில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ரஜினி பேசியது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம், அவர் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பேட்டி - கீ. வீரமணி (திராவிடர் கழக தலைவர் )Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.