ETV Bharat / city

சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் - பள்ளி மாணவிகள் மத்தியில் விவாதம்! - International Day Of The Girl Child

சேலம்: சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளிகளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பேரணி உள்ளிட்டவைகளில் மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டாடினர்.

International Day Of The Girl Child celebration in Salem
author img

By

Published : Oct 11, 2019, 10:52 PM IST

சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நல்லப் பழக்கங்கள், தீயப் பழக்கங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொம்மலாட்டம், விளக்க உரைகள் பெண் குழந்தைகளின் மத்தியில் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பொது விவாத நிகழ்வு சேலத்தில் இன்று நடைபெற்றது.

இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானசவுந்தரி; மகளிர் அமைப்பு , தொழிலாளர் இயக்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.

இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுத் தலைவர் ராஜகோபால் கூறுகையில், 'பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியது குறித்த விழிப்புணர்வைப் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்படுத்திட வேண்டும்' எனக் கூறினார். மேலும் சர்வதேச பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் அரசுப் பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

இவ்விழாவினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி துணை காவல் துறை கண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி!

Intro:உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, சேலம் அரசு உதவி பெறும் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Body:பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில் பெண் குழந்தைகள் மத்தியில் 'குட் டச்' 'பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படும் .

அந்த வகையில் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள சிந்தி இந்து உயர்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது . நல்ல பழக்கங்கள் தீய பழக்கங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொம்மலாட்டம், விளக்க உரைகள் இந்நிகழ்வில் பெண் குழந்தைகளின் மத்தியில் நடத்தப்பட்டன .

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழியை பள்ளி ஆசிரியர்களும் பெண் குழந்தைகளும் எடுத்துக் கொண்டனர்.

(திருமதி.கர்லின்,
தன்னார்வலர்)

Conclusion:இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிந்தி இந்து பள்ளி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.