சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியிலிருந்து 1000 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை நின்றதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று (ஜன 22) காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,206 கனஅடி நீர் வந்தது. இன்று(ஜன 23 ) காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,356 கன அடியாக உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்ட பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடியிலிருந்து நீர் திறப்பு, இன்று (ஜன 23) காலை 9 மணி முதல் 1000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடந்த 16ஆம் தேதியிலிருந்து முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 105.96 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 72,780 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை