ETV Bharat / city

ஏற்காட்டில் ஜோராக பெய்த ஆலங்கட்டி மழை!

author img

By

Published : Apr 15, 2022, 8:19 AM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சேலம் ஏற்காட்டில் நேற்று (ஏப். 15) ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

மழை
மழை

சேலம்: கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், நீலகிரி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை ஐந்து நாட்களுக்கு மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஏற்காடு மலைப்பிரதேசத்தில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது.

கோடையில் அதிசயமாகப் பெய்த ஆலங்கட்டி மழை

அப்போது, நேற்று மதியம் 3 மணி அளவில் ஏற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த கனமழை பெய்தது. குறிப்பாக, ஏற்காடு சேர்வராயன் கோவில் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக ஏற்காடு ஏரி பூங்கா மற்றும் படகு இல்லம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மேலும், இடைவிடாத கனமழையின் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் வழக்கத்தைவிட ஏற்காட்டில் கடும் குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொளுத்தும் கோடையை தணிக்க தமிழ்நாட்டில் மழை வரப்போகிறது!..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.