ETV Bharat / city

'ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்
இபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்
author img

By

Published : Dec 2, 2021, 8:17 PM IST

சேலம்: அதிமுகவின் மூத்தத் தலைவர் தம்பிதுரை இல்லத் திருமண விழா சேலத்தில் இன்று (டிச.2) நடைபெற்றது.

இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.

இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதிமுகவின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன், "சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா கிடையாது, ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டிலிருந்தே ஒதுக்கி வைத்திருந்தார்.

'ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிமுகவின் இரு கண்கள்' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்

ஒற்றைத் தலைமை: தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை

மேலும், அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் சட்ட விதிகளின் படி நடைபெறும், ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர்.

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான முடிவு, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

சாலையில் செல்லும் பலர் - போலத்தான் சசிகலாவும்
'சாலையில் செல்லும் பலர் - போலத்தான் சசிகலாவும்'

'சாலையில் செல்லும் பலர் போலத்தான் சசிகலாவும்'

எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும். முன்னாள் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் அரசால் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது.

சாலையில் செல்லும் பலர் அதிமுக கொடியைப் பயன்படுத்துவது போலத்தான் சசிகலாவும் பயன்படுத்துகிறார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி இழப்பு? - லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.