சேலத்தைச் சேர்ந்தவர் சேகர் (32). இவர், இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து மாற்று சிறுநீரகத்திற்காக காத்திருந்தனர்.
ஆனால் சேகருக்கு பொருத்தமான சிறுநீரகம் கிடைக்காமல் இருந்த நிலையில், அவரின் தந்தை அர்ஜுனன், தனது மகனுக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை தலைவர் பெரியசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நேற்று செய்து முடித்தனர்.
இதுகுறித்து சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:
தாய் பாசத்திற்கு காலமும் தூரமும் தடை இல்லை! மகனின் உணர்ச்சி பயணம்!