ETV Bharat / city

எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது - eps former personal assistant mani arrested

மோசடி புகாரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைதுசெய்யப்பட்டார்.

மணி
மணி
author img

By

Published : Nov 28, 2021, 2:18 PM IST

சேலம்: முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் மணி. இவர் தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக முன்னதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக கடலூர் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து மணியை காவலர்கள் தேடிவந்தனர்.

இதனிடையே மோசடி புகாரில் சிக்கிய மணி தலைமறைவாகி முன்பிணை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அவரது முன்பிணை மனு தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் இன்று காலை மணியை அவரது சொந்த ஊரான ஓமலூர் பகுதியில் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கைதுசெய்தனர்.

இந்நிலையில், மணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும், மணி வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.